அதிமுக கூட்டணி மட்டுமல்ல நாம் தமிழர் தலைவர் சீமானையும் இணைக்க திட்டம் – அமித்ஷா

Advertisements

சென்னை வரும்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுக கூட்டணி மட்டுமல்ல நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமானையும்  இணைத்து திட்டம்? மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.சமீபத்தில் மத்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழகத்தின்  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பில்  அதிமுக – பாஜக கூட்டணி பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் எடப்பாடியிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் பற்றியும் அமித்ஷா ஆலோசனைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு வரும் அமித் ஷா.. சீமான் பற்றியும் எடப்பாடியிடம் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி – அமித்ஷா பாஜக – அதிமுக கூட்டணி அமைத்தால் மட்டுமே தமிழ்  மக்கள் விரோத  திமுக கூட்டணியை வீழ்த்த முடியும் என்றும்  வேறு கூட்டணிக்கு அரித்மேட்டிக் வாய்ப்புகள் கிடையாது எனவும்  வேறு கூட்டணியால்  திமுகவை வீழ்த்தவே  முடியாது என்றும். தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில்  திமுகவின் வெற்றி சதவிகிதம் பல தொகுதிகளில் குறைவாகத்தான் இருந்தது.  பாஜக வாக்கு சதவிகிதம் தான் பல இடங்களில் திமுக வெற்றிக்கு காரணம். அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொண்டு இருந்தால்  திமுகவை பல தொகுதிகளில் தோற்கடித்திருக்கலாம் என்ற கோணத்தில் இருவரும் விவாதித்தாக கூறப்படுகிறது.
2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும். நமக்கு இடையே நிறைய வேறுபாடுகள்,  நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்  அவைகள் எல்லாம் நமது கூட்டணியில் எதிராக அமைந்து விடக்கூடாது என்றும்    நமது கூட்டணியின் நோக்கம் ஒன்றாக இருக்க வேண்டும். அது 2026 ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில்  திமுகவை வீழ்த்துவதே  நமது  கூட்டணியின் அடிப்படையாக நோக்கமாக  இருக்க வேண்டும். என்ன விலை கொடுத்தாவது திமுக ஆட்சியை 2026 சட்டமன்ற தேர்தலில் அகற்றுவதுதான் நமது குறிக்கோள் என்று அமித் ஷா எடப்பாடியிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு வரவுள்ள  மத்திய உள்துறை அமைச்சர் பல்வேறு தரப்பினரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அதிமுகவின் முக்கியமான சட்டமன்ற உறுப்பினர்களுக்கு   கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில்  5 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம்.. எல்லோரும் சென்னையிலேயே இருக்குமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.இந்த கூட்டத்தில் அதிமுக – பாஜக கூட்டணி பற்றி எடப்பாடி – அமித்ஷா இறுதி செய்வார்கள் என்று  கூட்டணி பற்றிய இறுதி அறிவிப்புகள்  விரைவில் வெளியாகலாம் என்றும் கூறுகிறார்கள். அதிமுக கூட்டணியில் இந்த முறை பாஜக கிட்டத்தட்ட 100க்கும்  மேற்பட்ட  இடங்களை பெற திட்டமிட்டு உள்ளதாகவும்  அதாவது 100 க்கு மேற்பட்ட இடங்களை பெற்று விட்டு அதில் சிலவற்றை தனது கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவும் கூடுதல் இடங்களை வாங்கும்  இடங்களை அம்மா மக்கள்  முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன்,  முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *