பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ்..!

Advertisements

பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி ராமதாஸ் நீக்க படுவதாகவும்  நானே தலைவராக பதவியேற்கிரேன் என்றும் கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்து பாஜக கூட்டணியில் தொடர்வது  குறித்து முடிவு எடுக்கப்படும் என அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்படுவதாகவும், தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் காலப்போக்கில் சிறுக, சிறுக பகிர்ந்து கொள்வேன் என்றும் பாமகவின் நிறுவனரான நானே தலைவர் பொறுப்பையும் எடுத்துக் கொள்கிறேன்  என்றும் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் கட்சியின்  செயல் தலைவராக தொடருவார் என்றும் ஜி.கே. மணி  கௌரவ தலைவர் பொறுப்பு வகிப்பார் என்றும் கூறினார். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்தி மகத்தான் வெற்றி பெறவே இத்தகைய முடிவு எடுத்துள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்  அதிமுக உடன் கூட்டணி அமைக்க தயாராக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் பாமக தலைவராக இருந்து அன்புமணி ராமதாஸ் வலுயுறுத்தலின் காரணமாகவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்  இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் பாமக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

தந்தை ஒரு பாதையிலும், மகன் ஒருபாதையிலும் பயணிக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் கடந்த ஆண்டு பாமாக பொதுக்குழு கூட்டத்தில் மருத்துவர்  ராமதாஸ் மூத்த மகள் வழி பேரன் முகுந்தனை அக்கட்சியின் மாநில  இளைஞர் அணி தலைவராக அறிவித்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி ராம் ராஸ்  பொதுக்கூட்ட மேடையிலேயே  தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணி க்கும்  இடையே கருத்து மோதல் ஏற்பட்டதால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனிடையே மே 11ஆம் தேதி சென்னை அருகே மகாபலிபுரத்தில்    வன்னியர் மாநாட்டை பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் நடத்தப்படும் என்றும்  ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக திமுகவின் தலைவராக இருந் கலைஞர் கருணாநிதி வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு  கட்சி நடவடிக்கைகளில் செயல்பட முடியாமல்  இருந்த போது  தற்போதைய திமுக தலைவர் அப்போது  செயல் தலைவராக இருந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டதும் தமிழகத்தின்  முன்னாள் முதலமைச்சர்  கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு தற்போதைய தமிழகத்தின் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைவராக  பொறுப்பேற்று செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *