Ravneetsingh bittu:இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி ராகுல்; போட்டுத்தாக்கிய மத்திய அமைச்சர்!

Advertisements

புதுடில்லி: இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி யார் என்றால் நான் காங்கிரஸ் எம்.பி., ராகுலைத்தான் கூறுவேன் என்று மத்திய இணை அமைச்சர் ரவ்நீத்சிங் பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த காங்கிரஸ் எம்.பி., ராகுல் வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் சீக்கியர்கள் குறித்து பேசினார். அப்போது அவர், இந்தியாவில் ஒரு சீக்கியர், தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவாரா, குருத்வாராவுக்கு செல்ல அனுமதிக்கப்படுவாரா, அதற்கே இங்கு சண்டை நடக்கிறது என்று பேசி இருந்தார்.

ராகுலின் இந்த கருத்துக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பல்வேறு சீக்கிய அமைப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந் நிலையில் மத்திய இணை அமைச்சர் ரவ்நீத்சிங் பிட்டு, இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி ராகுல் என்று விமர்சித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறி உள்ளதாவது; ராகுல் தமது தாய்நாட்டை அதிகம் நேசிப்பது இல்லை. என் கருத்துப்படி அவர் ஒரு இந்தியரும் அல்ல. ஏன் என்றால் வெளிநாடுகளுக்குச் சென்று தவறாக நமது நாட்டை பற்றி பேசுகிறார். அவரின் பேச்சுக்களை பிரிவினைவாதிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் தயாரிப்பவர்கள் தான் பாராட்டி உள்ளனர் என்றால் அவர் தான் நம்பர் 1 தீவிரவாதி.

என் கருத்துப்படி யாரையாவது அல்லது நாட்டின் மிக பெரிய எதிரியை பிடித்தால் வெகுமதி அளிக்கப்பட வேண்டும் என்றால் அது ராகுல் தான்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *