“கடற்கரையில் பேனா சிலை வைத்தே தீருவேன்” – ராஜ்மோகன் விமர்சனம்!

கடற்கரையில் பேனா சிலையை வைத்தே தீருவேன் என அடம்பிடிக்கும் ஆட்சியாளர்கள் தாங்கள் அல்ல என கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தவெக, கம்யூனிஸ்ட் கூட்டணி மிகவும் உறுதியாக இருப்பதாகவும் ஜனநாயக பூர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் புதிய தலைமை செயலகம் கட்டுவது குறித்து இன்னும் இறுதி முடிவு ஏதும் எடுக்கவில்லை என்று கூறினார். கடற்கரையில் பேனா சிலையை வைத்தே தீருவேன் என அடம்பிடிக்கும் ஆட்சியாளர்கள் தாங்கள் அல்ல என்றும் அனைவரது கருத்துக்களுக்கு செவி கொடுக்கும் ஆட்சி என்றும் குறிப்பிட்டார். ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி விவகாரம் கொடூரமானது என்றும் திமுக ஆட்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தை கம்யூனிஸ்ட்டுகள் கண்டித்தார்களா எனக் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *