முதல்வர் விஜய் லண்டன் பயணம், அண்ணாமலை விமர்சனம் – அமைச்சர் மரியவில்சன் பதிலடி!

முதலீடுகளுக்காக முதலமைச்சர் வெளிநாடு செல்வதை கிண்டல், கேலி செய்வது நல்லதல்ல என்று நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

சென்னை, தண்டையார்பேட்டை, ஐ.ஓ.சி. எண்ணூர் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபன், நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதைதொடர்ந்து, நிரித்துறை அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாம் தலைவர் கட்சியின் அண்ணாமலையை முதிர்ந்த அரசியல்வாதி என தான் நினைத்ததாகவும், முதலீடுகளுக்காக முதலமைச்சர் வெளிநாடு செல்வதை கிண்டல், கேலி செய்வது நல்லதல்ல  என்றும் கூறினார்.

 

தமிழகத்தில் வெளிப்படையான, தூய்மையான ஆட்சி நடைபெறுவதால் பத்திரப்பதிவுக்கு அதிகம் பேர் வருவதாகத் தெரிவித்தார். கடந்த ஆட்சியை ஒப்பிடுகையில் கடன் அளவை குறைத்து வருவதாகவும், தமிழக அரசின் வருவாயை பெருக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். ஊழல் இல்லாத ஆட்சியால் ஒட்டுமொத்த வரி வருவாய் 8 சதவிதம் அதிகரித்துள்ளது என்றும் 19 சதவித கடனை குறைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *