கழிவறை Tissue paper-ஐ போல் தங்களை பயன்படுத்தியது அமெரிக்கா – கவாஜா ஆசிப்.!

தங்களை கழிப்பறை காகிதம் போல பயன்படுத்தி தூக்கி வீசி விட்டது அமெரிக்கா என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் உரையாற்றினார். அப்போது, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் இணைய முடிவு செய்தது முன்னாள் ராணுவ சர்வாதிகாரிகள் ஜியா உல் ஹக், பர்வேஷ் முஷாரப் ஆகியோர் செய்த தவறு என்று தெரிவித்தார்.

அவர்கள், உலகின் வல்லரசை திருப்திபடுத்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரில் இணைந்தனர் என்று கூறினார். இந்த செயலால், தலிபான்களை பாகிஸ்தானுக்கு எதிராக திருப்பியது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது என்றார்.

தங்களை நன்றாக பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா, வேலை முடிந்ததும், கழிப்பறை காகிதத்தை விட மோசமாகத் தூக்கி எறிந்து சென்றது என்று குற்றம் சாட்டினார்.

தீவிரவாதம் என்பது கடந்த கால சர்வாதிகாரிகள் செய்த தவறுகளின் விளைவு என்றும் பாகிஸ்தானின் தவறு மீண்டும் மாற்ற முடியாதவை என்றும் புலம்பி தள்ளினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *