T20 World Cup : இந்தியா, நமீபியா அணிகள் இன்று மோதல்.!

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்தியா, நமீபியா அணிகள் இன்று மோதுகிறது.

டெல்லியில் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், இந்தியா, நமீபியா அணிகள் மோதுகின்றன. இதில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான வீரர்களும், நமீபியா அணியின் கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் தலைமையிலான வீரர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில், இன்றையப் போட்டியில் நமீபியாவை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது. மேலும், நமீபியாவுக்கு எதிராக இந்திய அணி அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் புதிய சாதனை படைக்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *