
புதுடில்லி: ‘2027ம் ஆண்டுக்குள் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்,’ எனச் சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எப்.,) துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் தெரிவித்தார்.
அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக உள்ளது. கடந்த நிதியாண்டில் நாங்கள் எதிர்பார்த்ததை விட, வளர்ச்சி மிகவும் சிறப்பானதாக இருந்தது. 2027ம் ஆண்டுக்குள் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்.
7 சதவீதம்
தரவுகளின் படி, 2024-25ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக அதிகரிக்கும். இது, இந்திய அரசின் கணிப்பைவிட அதிகம். தனியார் நுகர்வு செலவினம் 2023-24-ம் நிதியாண்டில் 4.0 சதவீத வளர்ச்சியடைந்தது. இரு சக்கர வாகன விற்பனையைப் பார்த்தால், உங்களுக்குத் தெரியும். இந்தியாவில் வாங்குவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

