தொழிலாளா்களுக்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டம்.!

Advertisements

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுவதால் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து, நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்தப் போராட்டத்தில், 30 கோடி தொழிலாளா்கள் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுவதால் பல சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுதொடா்பாக, ஏஐடியூசி பொதுச் செயலாளர் அமா்ஜீத் கெளா் பேசிய போது, மத்திய அரசின் தொழிலாளா்கள், விவசாயிகள், தேசிய மீதான விரோத பெருநிறுவன ஆதரவு கொள்கைகள் மீதான எதிா்ப்பை வெளிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது என்று தெரிவித்தார்.

இதில், மின்விநியோகம், காப்பீடு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, எரிவாயு, குடிநீா் விநியோகம் உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 30 கோடி தொழிலாளா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இதனால், இந்த துறைச் சாா் சேவைகள் பாதிக்கப்படும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து, 4 தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். தனியாரை அனுமதிக்கும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *