
“முதலில் நாம் பார்க்கப் போவது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பனிப்போர் குறித்த ஒரு அதிர்ச்சித் தகவல். உலக நாடுகளுக்குத் தன் ராணுவ ரகசியங்களை எப்போதுமே வெளிப்படையாகக் காட்டாத சீனா, தற்போது அமெரிக்காவையே மிரள வைக்கும் ஒரு புதிய ஆயுதத்தை ரகசியமாகத் தயாரித்துள்ளது.
அமெரிக்காவின் அதிமுக்கிய உளவு விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்களை வானில் பறந்துகொண்டே துல்லியமாக அடித்து நொறுக்கும் வல்லமை கொண்ட ‘ஹைப்பர்சோனிக்’ (Hypersonic) ஆயுதங்களைச் சீனா உருவாக்கியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தற்போது எச்சரித்துள்ளது.
இது சாதாரண ஏவுகணை கிடையாது மக்களே! சுமார் இரண்டாயிரத்து ஐநூறு கிலோமீட்டர் முதல் எட்டாயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று, பசிபிக் கடலில் உள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான ‘குவாம்’ (Guam) மற்றும் ‘ஹவாய்’ (Hawaii) ராணுவத் தளங்களை நேரடியாகத் தாக்கும் சக்தி கொண்டது.
ஒலியை விடப் பல மடங்கு வேகத்தில் சென்று, நடுவானில் தன் திசையைத் தானே மாற்றிக்கொள்ளும் இந்த விபரீத ஆயுதத்தை, எந்தக் காலத்து ரேடார்களாலும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியிலும் கலக்கத்திலும் ஆழ்ந்துள்ளனர்.”
“இந்த ஹைப்பர்சோனிக் கிளைடு ஆயுதங்கள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலமாகத்தான் அனுப்பப்படும். கீழ்வளிமண்டலத்தை எட்டியதும், இது ஏவுகணையில் இருந்து பிரிந்து தனித்து இயங்க ஆரம்பிக்கும். அதன்பின், ஒலியை விட பல மடங்கு வேகத்தில் வானில் உள்ள இலக்கை நோக்கி, எதிரியின் ரேடாரில் துளியும் சிக்காத வகையில் தன் திசையை மாற்றி மாற்றிச் சீறிப்பாயும். சில சமயங்களில் எதிரியை ஏமாற்றத் தன் பாதையையும் மாற்றிக் கொள்ளும் தொழில்நுட்பம் இதில் உள்ளது. இது அமெரிக்க ராணுவத்திற்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.”
“அடுத்ததாக, அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஈரானை பொருளாதார ரீதியாக முற்றிலுமாக முடக்கும் நோக்கில் அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஈரானின் அனைத்து வருவாய் ஆதாரங்களையும் தடை செய்யும் வகையில் ‘ஆபரேசன் பொருளாதார புறக்கணிப்பு’ என்ற அதிரடி நடவடிக்கையை அறிவித்துள்ள அமெரிக்கா, ஈரானுடன் யார் வர்த்தகம் செய்தாலும் அவர்கள் மீதும் கடும் தடை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. பிற நாடுகளிடம் இருந்து ஈரானை தனிமைப்படுத்துவதே இதன் நோக்கம்.”
“ஆனால், ஈரானின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருக்கும் சீனாவோ, அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் என்று போர்க்கொடி தூக்கியுள்ளது.இதுதொடர்பாகப் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், ‘ஈரானுடனான எங்கள் ஒத்துழைப்பு என்பது சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டது.
“இந்த மோதலில் இன்னொரு முக்கியமான திருப்பம் என்னவென்றால், ஈரானுடன் வர்த்தகம் செய்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதில் நான்கு இந்திய நிறுவனங்களும், மூன்று இந்தியர்களும் கூட அமெரிக்காவின் தடைப் பட்டியலில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.”
ஒருபுறம் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான ராணுவப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மறுபுறம் பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானை வளைக்கப் பார்க்கும் அமெரிக்காவின் நடவடிக்கையால் சர்வதேச அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்த மோதல்கள் எந்த மாதிரியான திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!


