புதுச்சேரிக்கு 2 நாட்கள் ரெயில் சேவை ரத்து!

Advertisements

புதுச்சேரி:

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் 27 மற்றும் 28-ந்தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், புதுச்சேரிக்கு இயக்கப்படும் சில ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரெயில் (17655) மற்றும் கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் (17653) ஆகியவை 27-ந்தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.

திருப்பதி-புதுச்சேரி மெழு எக்ஸ்பிரஸ் ரெயில் (161II) 28-ந்தேதி திருப்பதியிலிருந்து விக்கிரவாண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.

அதே நாளில் மாலை 4 மணிக்குப் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய மெமு ரெயில், மாலை 5.07 மணிக்கு விக்கிரவாண்டியிலிருந்து புறப்படும்.

28-ந்தேதி மதியம் புதுச்சேரியிலிருந்து புறப்பட வேண்டிய கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் (17654) செங்கல்பட்டிலிருந்து மதியம் 3.30 மணிக்கு இயக்கப்படும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *