
பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்க 277 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை குறித்து அமைச்சர் சம்பத்குமார் உரையாற்றினார். அப்போது, மக்கள் நலன் என்று கூறித் தன் மக்கள் நலனை மட்டும் பார்த்தனர் என எம்ஜிஆர் பாட்டைப் பாடி அமைச்சர் சம்பத்குமார் தனது உரையைத் தொடங்கினார்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும் அமைச்சர் பாடிய எம்ஜிஆர் பாட்டுக்கும் என்ன சம்பந்தம் என தெரியவில்லை என்று விமர்சித்தார். தொடர்ந்து, பேசிய அமைச்சர் சம்பத்குமார், திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாத நிலை இருக்க கூடாது என்றும் வாய்ப்பு கிடைத்தால் தான் எந்தச் சமூகமும் உயரும் என்றும் கூறினார்.
பதினோராம் வகுப்பு படிக்கும் 5 இலட்சம் மாணவர்களுக்குத் தலைக்கவசம், குடிநீர் பாட்டிலுடன் மிதிவண்டி வழங்க 277 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


