தி.மு.க.வின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது – அண்ணாமலை!

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,

தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் கழகக் கண்மணிகளுக்குக் கடிதம் எழுதியதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அந்தக் கடிதத்தில், நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை என்றும், யாரும் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக இருக்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மும்மொழி கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏன் மறுக்கப்படுகிறது என்ற கேள்விக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை பதில் அளிக்க மறுத்துள்ளார்.

மும்மொழி கற்க தடை இல்லை, ஆனால் நீங்கள் கற்க விரும்பினால், தி.மு.க.வினர் நடத்தும் சிபிஎஸ்இ அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *