
அமரன்’ திரைப்படத்தை, ஏதோ ஒரு சமூகத்திற்கு எதிரானது போலச் சித்தரிக்க முயலும் தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபாவின் செயலுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மேஜர் முகுந்த் வரதராஜனின் வீர வரலாற்றைப் போற்றும் ‘அமரன்’ திரைப்படத்தை, ஏதோ ஒரு சமூகத்திற்கு எதிரானது போலச் சித்தரிக்க முயலும் தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபாவின் வஞ்சக அரசியலைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றிய உண்மைக்கதையைப் படமாக எடுத்தால், அது எப்படி இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக அமையும்? என்று வினவியுள்ளார். முஸ்தபாவின் அனுதாபம் இந்திய ராணுவத்திற்கா அல்லது எல்லையைத் தாண்டி வரும் பயங்கரவாதிகளுக்கா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திரையில் தீவிரவாதி தண்டிக்கப்படுவதை ஒரு சமூகத்திற்கு எதிரானதாகக் காட்டி, தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கத் துடிக்கும் முஸ்தபாவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய நச்சுப் பேச்சுக்களைத் தமிழக முதலமைச்சர் விஜய் . உடனடியாகக் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.




