
சுயநிதித் திட்டத்தில் வழங்கிய கடனுதவியைப் பெற்றுப் பயனடைந்தோரில் 46 விழுக்காட்டினர் பெண்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து மனத்தின் குரல் என்னும் பெயரில் மாதந்தோறும் வானொலியில் உரையாற்றி வருகிறார். 137ஆவது மாதமாக இ
ன்றும் உரையாற்றினார்.
அப்போது பிஎம்சுயநிதித் திட்டத்தில் வணிகத்தை மேம்படுத்தக் கடன்பெற்றோரில் 46 விழுக்காட்டினர் பெண்கள் என்றும், இவ்வாறு 35 இலட்சம் பெண்கள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒரு பெண்ணின் தொழில் வளர்ச்சி அடைந்தால் பிள்ளைகளின் கல்வி மேம்படும், வீட்டுத் தேவைகள் நிறைவு செய்யப்படும், அந்தக் குடும்பமே முன்னேறும் என்று தெரிவித்தார்.
தன்னையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று குறிப்பிட்டார். அமர்நாத் புனிதப் பயணத்தின்போது துப்புரவுத் தொழிலாளர்களுடன் பொதுமக்களும் தூய்மைப் பணியில் பங்கேற்றதாகவும், அப்போது 400 டன் கழிவுகள் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
செப்டம்பர் நான்காம் நாள் கோகுலாஷ்டமி நாள் வருவதாகவும், அதன்பிறகு கைவினைஞர்களைப் போற்றும் விஸ்வகர்மா பூஜை வருவதாகவும் குறிப்பிட்டார்.
தீபஒளித் திருநாளில் மண்ணாலான அகல்விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.




