Nepal : தமிழகத்தில் இருந்து சென்ற 319 பேரில் 219 பேர் பாதுகாப்பு – ராஜ்மோகன் பேட்டி.!

தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 319 பேர் பல்வேறு குழுக்களாக நேபாளத்துக்குச் சென்றுள்ளதாகவும், இவர்களில் 219 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் நாளைக்குள் தமிழ்நாடு திரும்புவார்கள் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

தில்லியில் இருந்து அமைச்சர்கள் ராஜ்மோகன், வினோத் ஆகியோர் விமானத்தில் சென்னைக்கு வந்தனர். விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, நேபாளத்திற்கு பல்வேறு சுற்றுலா மற்றும் யாத்திரைக் குழுக்கள் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த மொத்தம் 319 பேர் சென்றிருந்ததாகத் தெரிவித்தார்.

இவர்களில் 219 பேர் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள சுமார் 100 பேரின் நிலை குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மீட்கப்படும் தமிழக மக்கள் தில்லி வழியாகச் சென்னைக்கு அழைத்து வரப்படுவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *