Salem : புதிய தீயணைப்பு நிலையத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்.!

Advertisements

செவ்வாய்ப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்..

சேலம் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தொடர்ந்து, செவ்வாய்ப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டு, புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து பணிகளை தொடங்கி வைத்தார்.

அவசர காலங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் வகையில் இந்நிலையம் செயல்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சேலம் மண்டல துணை இயக்குநர் கல்யாண குமார், மாவட்ட அலுவலர் அப்பாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *