
மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டது ஏற்புடையதல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, கொள்கை விளக்கக் குறிப்பேடுகளில் வழக்கமாக இடம்பெறும் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகிய தலைவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது என்றும் இது உள்ளக்கத்தோடு நடந்துள்ளதா என கேள்வி எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இனி வரும் காலங்களில் இது போன்ற பிழைகள் நடைபெறாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, பதிலளித்த அவர், அது ஏற்புடையதல்ல என்றும் இதுவரை வழங்கி வந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
தவெக தலைமையிலான இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தலித் மக்களுக்கு இன்னும் பல சட்டப்பூர்வ உரிமைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதாகவும், வன்கொடுமை தடுப்புச் சட்டம் இந்தியா முழுவதும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற அதிகாரிகளின் கருத்துக்களால் பல நல்ல திட்டங்கள் முடங்குகின்றன என்றும் குறிப்பிட்டார்.



