
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
சுமார் 3 வாரங்களுக்கு மேல் நீடித்து வரும் இந்த போரில், ஈரான் முற்றிலும் சீரழிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஈரானின் கடற்படை, விமானப்படை அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனாலும் ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலில் வசித்து வரும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் பேசியபோது, இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், இந்தப் போரில் இந்தியர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.




