புகார் தெரிவிக்க வந்த பெண்ணிடம் வழக்கறிஞர் செய்த செயலை பாருங்களேன்..!

Advertisements

கணவனிடமிருந்து விவாகரத்து பெற தன்னிடம் வந்த பெண்ணை திருமணம் செய்த வழக்கறிஞர் ஒருவர், மீண்டும் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் அதிருப்தியில் முதல் மனைவி விஷம் குடிக்கும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருநின்றவூர் அருகே நத்தம்பேடு கிராமத்தைச் சேர்ந்த திவ்யா என்பவர் கார்த்திக் என்பவருடன் திருமணமான மூன்று ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கார்த்திக்கிடமிருந்து விவாகரத்து பெறுவதற்காக முகுந்தன் என்ற வழக்கறிஞரை திவ்யா அணுகியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்குப் பிறகு முகுந்தன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து முகுந்தனுக்கும் திவ்யாவுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தன. ஒரு கட்டத்தில் முகுந்தன் திவ்யாவை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த திவ்யா இரு தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதற்கு முன்பாக அவர், முகுந்தன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், ஆளும் கட்சியில் அதிகாரத்தில் உள்ள சிலரோடு பழக்கம் இருப்பதாகவும் கூறி முகுந்தன் மிரட்டியதாக வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார் . இது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *