பெண்கள் சுகாதாரத்தை வலுப்படுத்த புதியத் திட்டம் தொடக்கம்..!

Advertisements

பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 17 ஆம் தேதிப் பெண்கள் சுகாதாரத்தை வலுப்படுத்த புதியத் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.

நாடு முழுவதும் பெண்களுக்கானச் சுகாதாரம் மற்றும் 8 ஆவது ஊட்டச்சத்து மாதத்தை வலுப்படுத்தப் புதியத் திட்டத்தைப் பிரதமர் மோடி வருகின்ற 17 ஆம் தேதித் தொடங்கி வைக்க உள்ளார். இந்த, திட்டத்தை ஒன்றியச் சுகாதாரமும், குடும்ப நல அமைச்சகமும், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து வழி நடத்துகின்றன.

பின்னர், நாடு முழுவதும் சுகாதார முகாம்களும், சேவைகளையும் வழங்குவதைச் சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து, ஊட்டச்சத்து மாதம் நடவடிக்கைகளைக் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இத்திட்டத்துடன் ஒருங்கிணைக்கின்றன. மேலும், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *