படை அதிகாரிகளின் தியாகத்துக்கு இந்த நாடு கடன்பட்டுள்ளதாக ஏபி சிங் பேச்சு

படை அதிகாரிகளின் தியாகத்துக்கு இந்த நாடு கடன்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி ஏபி சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை பரங்கிமலையில் பயிற்சி முடித்த படை அதிகாரிகளுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.

அதில் பயிற்சி முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பை விமானப்படைத் தளபதி ஏபி சிங் ஜீப்பில் சென்று பார்வையிட்டார். அவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

படைவீரர்களை வழியனுப்பும் விழாவில் உரையாற்றிய ஏ.பி.சிங், அறிவு, திறமை, ஒழுக்கம் ஆகியவற்றால் படை அதிகாரிகள் கூர்தீட்டப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

நாட்டுக்குத் தியாகம் செய்யும் படை அதிகாரிப் பணிக்குப் பிள்ளைகளை அனுப்பிய பெற்றோருக்கு நன்றி கூறுவதாகத் தெரிவித்தார். தியாகமும், நம்பிக்கையுமே வெற்றியைத் தேடித் தரும் என்றும் ஏபி சிங் கூறினார்.

படை அதிகாரிகளின் தியாகத்துக்கு நாடும் முப்படைகளும் கடன்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *