
போரூரில் மது போதையில் சிகரெட் கேட்டு தகராறு – தமிழர்களை வடமாநிலத்தவர்கள் துரத்தி துரத்தி தாக்கிக்கொண்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிகரெட் கேட்டு வாய் தகராறு – தமிழ் இளைஞர்களுக்கு பால் பிளாஸ்டிக் டப்பை வைத்து தாக்கிய வட மாநிலத்தவர்கள் சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே செயல்பட்டு வரக்கூடிய பிரபல தேனீர் கடை ஒன்றில் இளைஞர்கள் சிலர் நேற்று இரவு மது போதையில் சிகரெட் கேட்டு உள்ளனர் மது போதையில் இருந்ததால் சிகரட்டை தராததால் கடைக்காரருக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில் கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மது போதையில் இருந்த இளைஞர்கள் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரம் அடைந்த வட மாநில இளைஞர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் திடீரென ஒன்றுக்கூடி கட்டை, மற்றும் பிளாஸ்டிக் பால் டப்பு உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தமிழ் இளைஞர்கள் மூவரை சரமாரியாக கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர்.
இதில் தமிழ் இளைஞர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் வட மாநிலத்தவர்கள் பயங்கர ஆயுதங்களால் தமிழர்களை தாக்கக்கூடிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது..
