போர் பதற்றம் தொடர்பாக அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் தொடர்பாக அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இஸ்ரேல் , ஈரான் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நிலவி வந்த நிலையில், தற்போது மிகப்பெரிய மோதலாக உருமாறியுள்ளது.  ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு நடவடிக்கையை தடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சுமார் 50 நிமிடங்கள் நீடித்த அவர்களின் உரையாடலில் மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்ற நிலை குறித்து பேசப்பட்டது. மேலும் உக்ரைனுடான போர் நிறுத்தம் குறித்தும் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *