Tamilnadu : ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!

Advertisements

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் உள் மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி,மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இராமநாதபுரம்,புதுக்கோட்டை,தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், ஐனவரி 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *