
மலையாள சினிமாவில் முக்கிய நடிகைகளுள் லிஜோமோல் ஜோஸ் முக்கியமானவர். சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்களின் பாராட்டைப் பெற்றார்.
இந்நிலையில் இவர் அடுத்ததாகத் தமிழில் காதல் என்பது பொதுவுடைமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தை ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் லிஜொமோல் ஓரின சேர்கையாளர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் இவருடன் அனுஷா, ரோகினி, வினீத், தீபா, கலேஷ் ராமனாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தான் காதலிக்கும் அனுஷாவை லிஜோமோல் அவரது பெற்றோருக்கு அறிமுக படுத்துகிறாள்.
இதனை ஏற்க மறுக்கின்றனர் மேலும் லிஜோமோலை இந்தக் காதல் சரியானது அல்ல எனச் சமாதானம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
திரைப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் இசையைக் கண்ணன் நாராயணன் மேற்கொண்டுள்ளார், ஒளிப்பதிவு ஸ்ரீ சரவணன் செய்துள்ளார்.
இப்படம் 2023 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற 54 வது இந்தியன் பானரோமா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
