Joe Biden:துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு..புதிய சட்டம் கொண்டுவந்த அமெரிக்க!

Advertisements

வாஷிங்டன்:அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனாலும் துப்பாக்கி சூடு தொடர்ந்து வருகிறது.

குறிப்பாகப் பள்ளிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அமெரிக்காவில் இந்த ஆண்டு இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்ப வங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

துப்பாக்கி வன்முறையைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்தார்.

இந்தநிலையில் அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வர அதிபருக்கான நிறைவேற்று அதிகாரம்மூலம் புதிய சட்டத்தைக் கொண்டு வரப்போவதாக ஜோபைடன் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கான ஒரு நிர்வாக உத்தரவில் கையெ ழுத்திடுவேன். பள்ளிகளில் துப்பாக்கி சூட்டை தடுப்பதற்கான பயிற்சிகளுக்கு உதவ எனது அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

பின்னர் ஜோபைடன் கூறும்போது, அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர, முதலில் அமெரிக்காவில் துப்பாக்கி பிரச்சினைபற்றி நாம் வெளிப்படையாகப் பேச வேண்டும்.

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, நோய் அல்லது விபத்துகளில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைவிட அதிகம். இது மிகவும் வேதனையானது என்றார்.இதற்கிடையே துப்பாக்கி சூடு தாக்குதலைத் தடுப்பதற்கான புதிய சட்டத்தில் ஜோபைடன் கையெழுத்திட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *