தவெகவுக்கு தாவிய MLA-க்கள்: ‘அரசியல் நாகரீகம் இல்லை ’ திருமா தந்த ரியாக்ஷன்.!

Advertisements

அதிமுக பூசல் தற்போது ஓய்ந்துள்ளது. . தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் மீண்டும் அதிமுக பக்கமே திரும்பி இருக்கின்றனர் எஸ்.பி வேலுமணி தலைமையிலான அதிருப்தி அணியினர்.

நேற்றைய தினம் சபாநாயகரை சந்தித்து வேலுமணி தரப்பிலும் எடப்பாடி தரப்பிலும் தந்த மனுக்களை மாறி மாறி திரும்ப பெற்றிருக்கின்றனர். மேலும் தமிழக வெற்றி கழகத்திற்கு தான் கொடுத்த ஆதரவையும் வாபஸ் பெறுவதாக கூறியிருக்கிறார் எஸ்.பி வேலுமணி.மேலும் அவர் செய்தியாளர் சந்திப்பின்போது, கட்சிக்குள் பூசல் மட்டுமே இருந்ததாகவும் பிளவு எல்லாம் இல்லை எனவும் அவர் பேசியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், அ.தி.மு.க.வில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் சேர்வது என்பது நாகரீகமான அரசியலாக இருக்க முடியாது என தனது கருத்தை கூறியிருக்கிறார்.
ஏற்கனவே அதிமுக பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பையே உண்மையான அதிமுகவாக கருதுவதாகவும் அவர் பேசி இருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *