அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு இன்பதுரை எச்சரிக்கை : கொறடா உத்தரவை மீறினால் பதவி பறிபோகும்…!

அதிமுக கொறடாவை மீறி வாக்களித்தால் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பறிபோகும் என நாடளுமன்ற உறுப்பினர் இன்பதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக நாடளுமன்ற உறுப்பினர் இன்பதுரை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தால் அது கட்சித் தாவலாகவே கருதப்படும் என்றும் தெரிவித்தார்.

சிலர் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறுவதாலோ, அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது என்று கூறினார். இதன்படி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நியமித்துள்ள கொறடா அக்ரி கிருஷ்ண மூர்த்தியின் உத்தரவே சட்ட பூர்வமானது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி செயல்படும் எந்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பறிபோகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *