10 ஆவது முறையாக நிதிஷ் குமார் இன்று பதவியேற்ப்பு.!

Advertisements

பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ்குமார் முதலமைச்சராக இன்று பதவியேற்க உள்ளார். பீகார் சட்டசபை தேர்தலில் 243 தொகுதிகளில் 202 இடங்களைப் பெற்று ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அபார வெற்றி பெற்றது.

இதில், முக்கியமாக, பா.ஜ.க 89 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதாதளம் 85 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து, தலைநகர் பாட்னாவில், நிதிஷ்குமார் 10 ஆவது முறையாக இன்று முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

விழாவில் கவர்னர் ஆரிப் முகமது கான், நிதிஷ் குமாருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிலையில், பதியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *