துணைசபாநாயகர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவையில் கடந்த 6 ஆண்டகளாக துணை சபாநாயகர் பதவி நிரப்ப படாமல் வருகிறது. 2019 ஆம் ஆண்டு துணை சபாநாயகராக அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை பதவி வகித்தார். இதையடுத்து அப்பதவியில் யாரையும் நியமிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. துணை சபாநாயகர் பதவியை நிரப்பாமல் பாஜக அரசு மரபுகளை மீறி வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் துணைசபாநாயகர் பதவி குறித்து மௌனம் காப்பது ஏன் எனவும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது உள்ள ஆட்சியிலும் துணை சபாநாயகர் பதவி காலியாக இருந்து விடும் என ஐயம் எழுந்துள்ளதாக எதிர்கட்சிகள் கூறியுள்ளனர்.


