
சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தார்.
வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினர்.
கடந்த திமுக ஆட்சி காலமான 2006 – 2011 கால கட்டத்தில் அமைச்சராக பொறுப்பு வகித்த பொன்முடி, தங்கம் தென்னரசு, ஐ .பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்ஆர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றம் விடுவித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் வழக்கை விசாரித்து வருகிறது. அந்த வகையில் அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவியை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு விடுவித்தது.
இதனை எதிர்ந்து உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2017ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பு வழங்கினார். அதில் வருமானத்திற்கு அதிகமாக பொன்முடி 69% சொத்து சேர்த்தது உறுதி செய்யப்படதாக கூறினார். மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கியும் உத்தரவிட்டார்.
இதன் காரணமாக எம்எல்ஏ பதவியை இழக்க நேரிட்டதால் அமைச்சர் பதவியையும் இழந்தார். இதனையடுத்து ஒரு மாத காலத்தில் விழுப்புரம் சிறையில் சரணடைய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீனு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சிறையில் சரண்டைவதற்கான உத்தரவை நீதிபதி நிறுத்தி வைத்தார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது.
இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தார்.
இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினர். இதையடுத்து வழக்கு தொடர்பான கூடுதல் விபரங்கள், தீர்ப்பு விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணை மார்ச் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.




