“20 மடங்கு தாக்குவோம்!” – ஈரானை எச்சரித்த டிரம்ப்.!

எதிரிகள் தங்களைத் தாக்கும் ஒவ்வொரு முறைக்கும், தாங்கள் அவர்களை 20 மடங்கு திருப்பித் தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டு, அமெரிக்காவிற்கு ஏர் ஃபோர்ஸ் ஒன் என்ற தனியார் விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஈரானைத் தாங்கள் மிகக் கடுமையாகத் தாக்கியதாகத் தெரிவித்தார். எதிரிகள் தங்களைத் தாக்கும் ஒவ்வொரு முறைக்கும் 20 மடங்கு அதிகமாக, அதாவது 20-க்கு 1 என்ற விகிதத்தில் திருப்பித் தாக்குவோம் எனக் கூறினார்.

இதில், குறிப்பாக நேற்றிரவு அத்தகைய தாக்குதலை தாங்கள் நடத்தியதாகத் தெரிவித்தார். மேலும், தங்கள் மீது ஈரான் நடத்திய சிறிய அளவிலான தாக்குதலானது, உண்மையில் நேற்றிரவு தாங்கள் நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையே என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *