Nilgiri : இன்று பலத்தக் காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..!

நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்தக் காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சராசரி கடல் மட்டத்தில், தெற்கு குஜராத்திலிருந்து மத்திய கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்தக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *