
பாஜகவை வீழ்த்த திமுகவும், தவெகவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரை திமுகவில் இணைத்துக் கொண்டார்கள் என்பதற்காக நாங்கள் திமுகவை எதிர்க்கவில்லை என்று தெரிவித்தார். ஏனென்றால், தமிழ்நாட்டையோ அல்லது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையோ மட்டும் மனதில் கொண்டு தான் பேசவில்லை என்றும், தன்னுடைய பார்வை முழுவதும் தேசிய அளவிலானதே என்றும் கூறினார்.
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான அணியை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார். அந்த அணியில் திமுகவும் இருக்க வேண்டும், தவெகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து, உங்களுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று வைகோ கூறியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், அவருடைய பரிந்துரைக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், ஒருவேளை நோபல் பரிசு கிடைத்தால் கண்டிப்பாக அவருக்கு முதலில் நன்றி கூறுவேன் என்றும் தெரிவித்தார்.





