
தற்போது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்று ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். பல தரப்புகளில் இருந்தும் அவருக்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும், அதே அளவுக்கு பலரும் அதற்கு மாறான விமர்சனங்களையும் கூறி வருகிறார்கள். முந்தைய அரசுகளின் நலத்திட்டங்களை தொடர்வது, மதுக்கடைகளை மூடுவது, லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்வது போன்ற செயல்பாடுகள், ஆட்சிக்கு வந்த உடனே விஜய் சுறுசுறுப்பாக செயல்படுகிறார் என்று அரசியல் வட்டாரங்களும், பொதுமக்களும் அவர்களது கருத்துக்கள தெரிவிச்சுட்டு வந்தாங்க.
நிர்வாக ரீதியாக வாழ்த்துக்களைப் பெற்ற முதல்வர் விஜய்க்கு தற்போது பேரிடியாக வந்து முன் நிற்கிறது இந்த சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரச்சனை..! கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை, மரக்காணம் சிறுமி பாலியல் வன்கொடுமை,கோவையில் சிறுவன் வெட்டி கொன்று புதைப்பு, விழுப்புரத்தில் சிறுவன் வெட்டி கொலை என பல்வேறு குற்ற சம்பவங்களும் அரங்கேறிய வண்ணம் இருக்கிறது. இப்படியான சூழலில் பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் முதல்வர் விஜய்.
பொதுமக்கள் அனைவரும் இந்த சம்பவங்களை எதிர்த்து போராட்டங்கள், முற்றுகை என்று கொதித்து போயிருக்கக்கூடிய வேலையில, எதிர்க்கட்சி மற்றும் பல அரசியல் தலைவர்களும் இந்த குற்றங்களுக்கு எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகிறார்கள்.. முன்னதாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தங்கள் கட்சி ஆலோசனை கூட்டத்துல தேர்தல் முடிவுகள் நமக்கு ஏமாற்றம் தான். ஆனால் போகப்போக தமிழக மக்களும் ஏமாந்து வருகிறார்கள் என்று சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். மேல் சொல்லப்பட்ட அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தாரு. தமிழக அரசு ரீலிஸ் அரசாக செயல்படாமல் ரியல் அரசாக செயல்பட வேண்டும் என்றும் சாடியிருந்தாரு.
இவர்கள் வரிசையில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டிருக்கும் கண்டனப்பதிவு தற்போது பேசுபருளாக மாறியிருக்கு. நயினார் நாகேந்திரன் தனது X தளப்பாக்கத்துல “கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை சிறுமி கடத்தப்பட்டு,பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கோரசம்பவத்தின் ரணம் ஆறுவதற்கு முன்பாகவே, மீண்டும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு. அந்த சிறுமி மிகவிரைவுல குணமடைய வேண்டும் என்று தெரிவிச்சுருக்காரு .
தமிழகத்துல இருக்குற குழைந்தைகளுக்கெல்லாம் நான் தாய் மாமன் என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களே! ஆட்சி அதிகாரத்துக்கு வந்த உடனே ரவுடிகளையும்,குற்றவாளிகளையும் அமைச்சராக்குறதுல நீங்கள் காட்டிய வேகத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புல நீங்கள் காட்டாததின் விளைவுதா கோவை சிறுமி கடத்தப்பட்டு,கொல்லப்பட்ட கொடூரம்.அந்தக் குடும்பத்திற்கு என்ன ஆறுதல் சொல்லி தேற்றப் போகிறீர்கள் முதல்வரே என்று கேட்டிருக்கிறார்..
மாற்றத்திற்கான நேரம் என்று சொல்லிக்கொண்டு விளம்பர பிரச்சாரம் செய்வதில் கவனம் செலுத்தும் உங்கள் அரசு கொஞ்சமாவது பாதுகாப்பையும்,அக்கறையையும் பெண்கள் மற்றும் குழைந்தைகள் மீது காட்டியிருக்கலாமே ? தமிழகத்தின் தற்போதைய அவசியமும், அத்தியாவசியமும் சட்டம் ஒழுங்கை சமன் செய்வது தானே.. தனக்கு ஓட்டுப்போடுமாறு உங்க அப்பா அம்மாவை நச்சரிங்க
விஜய் மாமாக்கு ஓட்டு போடா சொல்லுங்க னு சொல்லி குழந்தைகளை தூண்டிவிட்டு ஓட்டு வாங்குனீங்க.
ஆனால் தற்போது அந்த குழைந்தைகள் தா தினமும் ஒரு பாலியல் மிருகத்திடம் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறார்கள். இதை அவர் வேடிக்கை பார்ப்பது மலிவான குணாதிஷ்யம் என்று கடுமையாக தனது கண்டனத்தை தெரிவிச்சுருக்காரு. தன்னோட ஆட்சியில இத்தனை அவலங்கள் நடந்துகிட்டு இருக்கும்போது,எதையுமே கண்டுகொள்ளாமல் ஒரு பொம்மை போல முதலமைச்சர் விஜய் அரியணையில் அமர்ந்திருக்கும் விஜய்க்கு தமிழகத்தை ஆள்வதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று சரமாரியான கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.
அதேபோல திருச்சி அரசு மருத்துவமையில தவறான அறுவை சிகிச்சை மூலம் உயிரிழந்த செவிலிய மாணவி உயிரிழப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நயினார் நாகேந்திரன். “ஏழை,எளிய மக்களுக்கு புகலிடமாக இருக்கும் அரசு மருத்துவமனைகள்,இப்படி உயிர்பறிக்கும் எமனாக மாறியிருக்கிறது.. சட்டம் ஒழுங்கு மற்றும் சுகாதார துறை பணிகளை துரிதப்படுத்தாம எந்த ரவுடிக்கு எந்த பதவியை கொடுக்கலாம் என்று யோசித்தால், இவற்றை எப்படி சரி செய்ய முடியும்? தமிழக அரசு உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரை அறிவிப்பை வெளியிட்டருக்காரு.
அதுமட்டுமில்லாம மிகவும் புகழ்பெற்ற ஆனை மங்கலம் செப்பேடுகளைப் பற்றி வாய் திறக்காதது ஏன் முதல்வரே என்றும், ராஜேந்திர சோழனால் வடிவமைக்கப்பட்ட ஆனைமங்கலம் செப்பேடுகளை நெதர்லாந்தில் இருந்து பாரத பிரதமர் மீட்டெடுத்துருக்கார். இது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு மட்டும் இல்லாம , தமிழக வரலாற்றையே மீட்டெடுத்த நிகழ்வு. இந்த நிகழ்விற்கு மத்திய அரசிற்கு நன்றி கூறாவிட்டாலும்,தமிழகத்தின் பிரதிநிதி என்ற தார்மீக முறையில அதை சமூக வலைத்தளத்துல கூட ஏன் பதிவிடவில்லை தமிழகத்தின் வரலாற்றையே போற்ற உங்களுக்கு மனமில்லையா என்றும் கேட்டிருக்கிறார்.
பல அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்திருக்கிறர் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.. சட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தமிழகத்தில் உறுதி செய்யப்படுமா? அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளில் பார்க்கலாம்.


