Jio World Plaza: திறப்பு விழாவில் கவர்ச்சி உடையில் நடிகைகள்!

அம்பானியின் ஜியோ வேர்ல்டு பிளாசா திறப்பு விழாவில் நடிகைகள் காஜல் அகர்வால், ஹன்சிகா, சுருதிஹாசன் ஆகியோர் ஜோடியோடு வந்து கலந்துகொண்டனர்.

ஜியோ வேர்ல்டு பிளாசா என்கிற பெயரில் மும்பையில் மிகப்பெரிய மால் ஒன்றை அம்பானி திறந்துள்ளார். இதன் திறப்பு விழா நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான திரையுலக பிரபலங்கள் படையெடுத்து வந்து கலந்துகொண்டனர்.

அம்பானியின் ஆடம்பர மால் ஓப்பனிங்கிற்கு நடிகை ஹன்சிகா தனது காதல் கணவர் சோஹைல் கத்தூரியா உடன் வந்து கலந்துகொண்டார். அப்போது இருவரும் ஜோடியாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.ஹன்சிகா மற்றும் சோஹைல் கத்தூரியா இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற்றது.

நடிகை காஜல் அகர்வாலும் தன்னுடைய கணவர் கவுதம் கிச்சிலு உடன் அம்பானி மால் ஓப்பனிங்கில் கலந்துகொண்டார். அப்போது இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.காஜல் அகர்வாலும், கவுதம் கிச்சிலுவும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு நீல் கிச்சிலு என்கிற அழகான ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனும் அம்பானியின் பிரம்மாண்ட மால் ஒப்பனிங்கில் கலந்துகொண்டார். அவர் தன்னுடைய காதலன் சாந்தனுவுடன் ஜோடியாக வந்திருந்தபோது எடுத்த ரொமாண்டிக் கிளிக்ஸ் எடுத்துக்கொண்டனர்.நடிகை ஸ்ருதிஹாசனும், சாந்தனுவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் தற்போது லிவ்விங் டுகெதராக மும்பையில் ஒன்றாக வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *