நடிகர்கள் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை!

Advertisements

கேரளாவில் நடிகர் முகேஷ் உட்பட நடிகர்கள்மீது பாலியல் புகார் கூறிய நடிகை, தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.

மலையாள சினிமாவில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிக்கக் கடந்த 2017-ல் நீதிபதி ஹேமா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கை வெளியானதை அடுத்து, மலையாள நடிகர்கள்மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இந்நிலையில் நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷ், மணியன் பிள்ளை ராஜு, இடைவேளை பாபு, ஜெயசூர்யா உட்பட சில நடிகர்கள்மீது நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறினார். இது பரபரப்பானது. இதையடுத்து சிறப்பு விசாரணைக் குழு அவர்களிடம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில் தனது பாலியல் புகாரை வாபஸ் பெறுவதாகப் புகார் கொடுத்த நடிகை அறிவித்துள்ளார். ‘மாநில அரசு உரிய பாதுகாப்பு தரவில்லை, வழக்கின் உண்மையை நிரூபிக்க அரசு தயாராக இல்லை’ என்று குற்றம் சாட்டியுள்ள அவர், அதனால் புகார்களை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *