ஆதவுக்கு பணம் எப்படி வருகிறது.? விஜய் மீது ஜோஸ் மார்ட்டின் குற்றச்சாட்டு.!

Advertisements
நடிகர் விஜய் தேர்தலுக்குப் பின் திமுகவில் சேர்ந்துவிடுவார் என்று ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனரும், லாட்டரி மார்டின் மகனுமான ஜோஸ் மார்ட்டின் கூறியுள்ளார்.  பிரபல லாட்டரி தொழில் அதிபர் மார்ட்டீனின் மனைவி லீமா ரோஸ் லால்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இவரது மகனும் லட்சிய ஜனநாயக கட்சி தலைவருமான ஜோஸ் மார்ட்டின்  திருச்சியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, தனது தாயார் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் என்று தெரிவித்தார். லால்குடி த.வெ.க வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன், நேற்று வரை அதிமுகவில் இருந்துவிட்டு இப்போது அரசியல் ஆதாயத்துக்காக தவெகவில் சேர்ந்திருப்பதாக கூறினார்.
அதிமுக வேட்பாளரான தனது தாயார் லீமா ரோஸிடம் லாட்டரி தொழிலில் சம்பாதித்த பணம் இருப்பதாக கு.ப.கிருஷ்ணன் குற்றஞ்சாட்டி வருவதாக கூறிய ஜோஸ் மார்ட்டின், த.வெ.கவில் உள்ள ஆதவ் அர்ஜுனாவுக்கு பணம் எப்படி வருகிறது என்று வினவினார்.

ஆதவ் அர்ஜுனாவை பணத்துக்காக மட்டுமே த.வெ.கவில் வைத்துள்ளனர் என்றும் அந்தக் கட்சியின் அனைத்துக் கூட்டத்திற்கும் அவர் மட்டுமே செலவு செய்து வருவதாக குறிப்பிட்டார். அது யாருடைய பணம் என்றும் கேள்வி எழுப்பிய ஜோஸ் மார்ட்டின், நடிகர் விஜய் திமுகவை விமர்சிக்கிறாரே தவிர, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் தொகுகளில் இப்போது வரை பிரசாரம் செய்யவில்லை என்றார்.
அதனால், இந்தத் தேர்தல் முடிந்தவுடன் திமுகவில் சேர அதிக வாய்ப்பிருப்பதாக கூறி  அதிர்ச்சியை ஏற்படுத்தினார்..
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *