
த.வெ.க பெண் நிர்வாகிகளை தாக்கிய காவலர்கள் மீது, கடும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டுமென, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையான நிலையில், குடிசைகளை இழந்த மக்களுக்கு உதவும் நோக்குடன், தமிழக வெற்றிக் கழகத் பொறுப்பாளர்கள் அத்தியாவசியப் பொருட்களும், உணவும் வழங்கியதை தமிழ்நாடு காவல்துறை தடுத்ததோடு, பெண் நிர்வாகிகள் என்றும் பாராமல் கடுமையாக தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்றார்.
மேலும், த.வெ.க பெண் நிர்வாகிகளை தாக்கிய காவலர்கள் மீது, கடும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டுமெனவும், மக்களுக்கு உதவுதைக்கூட தடுத்து தாக்கும் இதுபோன்ற கொடுமைகள் தொடரா வண்ணம், உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் தமிழ்நாட்டு அரசை, நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக அதில் கூறப்பட்டுள்ளது.


