எடப்பாடியை துரோகி என்று கனிமொழி குற்றச்சாட்டு.!

எடப்பாடி பழனிச்சாமியை துரோகி என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி  திமுக வேட்பாளர் துரை  சரவணனை ஆதரித்து  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, புவனகிரி பேருந்து நிலையம் அருகாமையில் பிரச்சாரம் செய்தார். அப்போது பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு  சேகரித்த அவரிடம்  அங்கு கூடியிருந்த தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை பற்றி  பேச சொல்லி கேட்டனர்.
அதற்கு பதிலளித்தவர் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக ஒரு மசோதா கொண்டு வந்ததை ஒருத்தர் ஆதரிக்க முடியும் என்றால்  அது எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் இதைவிட மோசமாக ஒருவர் துரோகம் செய்ய முடியாது என்றும்  குறறம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *