மதுவுக்கு அடிமையான நடிகை லட்சுமி மேனன்: ரவுடிகளுடன் தொடர்பு.!

Advertisements
பிரபல நடிகை லட்சுமிமேனன் மது பாரில் நடத்திய கலாட்டா தொடர்பாக பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.  சுந்தரபாண்டியன் கும்கி கொம்பன் உள்பட பல தமிழ் சினிமாக்களில் நடித்து இளம் தமிழ் நெஞ்சங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் லட்சுமிமேனன் .
சினிமாக்களில் கிராமத்து பெண்ணாக வலம் வரும் லட்சுமிமேனனை இப்பொழுது “டாண்” லட்சுமி மேனன் ஆக பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. தமிழில் சுமார் பத்து படங்களில் நடித்து முடித்த கையோடு மேலும் பட வாய்ப்பு இல்லாததால் தனது சொந்த ஊரான கேரளாவுக்கே திரும்பிச் சென்று விட்டார் நடிகை லட்சுமி மேனன் .
இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சி பேனர்ஜி சாலையில் உள்ள வெலாசிட்டி என்ற இரவு நேர சொகுசுமது பார்த்து லட்சுமி மேனன் சென்றார் . அவருடன் மிதுன் அனீஸா என்ற இரண்டு ஆண் நண்பர்களும் சோனா மோல் என்ற பெண் தோழியும் ஒரு காரில் சென்று உள்ளனர் .
இவர்கள் அனைவரும் மது பாரில் நன்றாக மது குடித்து இருந்த தகவல் இப்பொழுது வெளியாகி இருக்கிறது . இந்த சூழ்நிலையில் பக்கத்து மேஜையில் ஆலுவா என்ற இடத்தைச் சேர்ந்த அலியார்சா சலீம் என்ற ஐடி ஊழியருடன் இரண்டு நண்பர்களும் மது அருந்தி இருந்துள்ளனர் .
அப்பொழுது இரண்டு கும்பல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இதில் ஐடி ஊழியர் சலிமை காரில் கடத்திச் சென்று லட்சுமி மேனனின் நண்பர்கள் அடித்து தாக்கியுள்ளனர் .இது தொடர்பான புகாரின் பேரில் எர்ணாகுளம் வடக்கு காவல் துறை அதிகாரிகள் சிசிடிவி கேமரா ஆதாரங்களை வைத்து லட்சுமிமேனன் உள்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் .
இது தொடர்பாக லட்சுமிமேனன் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் அவரை கைது செய்யக்கூடாது என வருகிற செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வரை லட்சுமிமேனனுக்கு கேரள உயர் நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கி இருக்கிறது .
இதற்கிடையே நடிகை லட்சுமிமேனன் புகார் தெரிவிக்கும் பொழுது ஐடி ஊழியர் சலீம் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார் தன்னை அவர் சொல்லக்கூடாத வார்த்தைகளால் திட்டியதாகவும் பீர் பாட்டிலை எடுத்து தாக்க வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார் .
இதனிடையே லட்சுமி மேனன் தற்பொழுது சில ரவுடிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது . ஐ டி ஊழியர் கடத்தப்பட்ட தினத்தன்று லட்சுமிமேனன் உடன் சென்ற மிதுன் என்பவர் ஏற்கனவே ஆள் கடத்தல் வழக்கு கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் ஒரு நகை வியாபாரிகிலோ கணக்கில் நகைகள் கொண்டு சென்றபோது அவரை கடத்தி நகையை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார் இந்த மிதுன் .
அப்படிப்பட்ட மிதுனுடன் லட்சுமிமேனனுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது அவரை ஆண் நண்பராக எப்படி ஏற்றுக் கொண்டார் என்பது புரியாத புதிதாக இருக்கிறது . இது தவிர ஐடி ஊழியர் மீது லட்சுமி மேனன் ஏன் காவல் நிலையத்தில் புகார் செய்யவில்லை என்ற கேள்வியும் எழந்துள்ளது .
இது மட்டுமல்லாமல் லட்சுமிமேனன் தீவிர மது பிரியர் என்றும் தினமும் அவர் எட்டு அல்லது ஒன்பது மணிக்கு பிறகு  மது குடிக்க ஆரம்பித்து விடுவார் என்றும் சொல்லப்படுகிறது மேலும் கலாட்டா நடந்த மதுபாருக்கு அவர் ரெகுலர் கஸ்டமர் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதற்கிடையே மது பாரில் நடந்த கலாட்டா என்பது வேறு ஏதோ பின்னணியில் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது இது குறித்து கேரள போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *