Advertisements

நித்தியானந்தா அழைப்பின் பேரில் நடிகரும் பிரபல அரசியல்வாதியுமான எஸ்வி சேகர் விரைவில் கைலாசா செல்ல இருக்கிறார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது . தமிழக போலீஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வரும் குற்றவாளி நித்தியானந்தா . திருவண்ணாமலையில் சாமியாராக இருந்த நித்தியானந்தா தமிழ்நாட்டிலிருந்து தலைமறைவாகி தற்பொழுது கைலாசா என்ற நாட்டில் வாழ்ந்து வருவதாக சொல்கிறார்கள் .
கைலாசா நாட்டில் அனைத்துமே இலவசம் என்கிற ரீதியில் அங்கு சுமார் 150 பேர் இருப்பதாக சொல்லப்படுகிறது . இந்த நிலையில் நித்யானந்தா அவ்வப்போது ஏதாவது பரபரப்பான வீடியோக்களை வெளியிட்டு வருவார் . அதேபோல் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கும் தகவல் ஏற்கனவே திமுகவை ஆதரித்து கொண்டு இருக்கும் நடிகர் எஸ்வி சேகர் கைலாசாவிற்கு வருவதாக வேண்டுகோள் விடுத்ததாகவும் அதற்கு பதில் கிடைக்கவில்லை என்ற தகவலும் சொல்லப்பட்டு இருக்கிறது .
இந்த நிலையில் நித்யானந்தா பேசிய வீடியோவில் அன்புள்ள எஸ்வி சேகர் அவர்களுக்கு வணக்கம் ஏன் என்னை கைலாசவுக்கு அழைக்கவில்லை என நீங்கள் கேட்டு இருக்கிறீர்கள். உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் . 25 ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் என்னிடம் கொடுத்த ஒரு புகைப்படத்தை இன்னமும் எனது பூஜை அறையில் வைத்து பூஜித்து வருகிறேன். அதனை உங்களிடம் காண்பிப்பதற்காகவாவது நிச்சயம் உங்களை நான் கைலாசவுக்கு அழைப்பேன்.
தற்போது சில வேலைப்பளு மற்றும் சமூக காரணங்களால் உங்களை கைலாசவுக்கு அழைத்து வர முடியவில்லை. அதே நேரத்தில் விரைவில் கைலாசவுக்கு நீங்கள் வருவீர்கள் அதற்கான அழைப்பு உங்களுக்கு அனுப்பப்படும் என பேசியிருக்கிறார் இந்த வீடியோ இப்பொழுது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தற்பொழுது திமுக ஆதரவாளராக இருக்கும் எஸ்வி சேகர் நித்தியானந்தா உடன் எப்படி பேசலாம் அவர் ஏற்கனவே நித்தியானந்தாவை தொடர்பு கொண்டு இருக்கிறார். அப்படியானால் எப்படி தொடர்பு கொண்டார் என கேள்விகள் எழுப்பிய வண்ணம் இருக்கிறார்கள் என்பது முக்கிய செய்தி ஆகும்.
Advertisements


