
நடிகர் யாஷ் , ஒரு கதாபாத்திரத்திற்காக அவர் அர்ப்பணித்த விதத்திற்கு தாம் தலைவணங்குவதாகக் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
‘டாக்ஸிக்’ திரைப்படம் குறித்து பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பெரும்பாலான திரைப்படங்கள் பயணிக்கும் வழக்கமான பாதையில் இப்படத்தின் கதையும், முக்கிய கதாபாத்திரங்களும் பயணிக்காமல் இருக்கலாம். ஆனால், அதனால் அந்தப் பாதை தவறானது என்று அர்த்தமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் யாஷ் , ஒரு கதாபாத்திரத்திற்காகவும், அதற்கான உலகத்திற்காகவும் முழுமையாக அர்ப்பணித்த விதத்திற்கு தாம் தலைவணங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கதாபாத்திரத்தில், ஒவ்வொரு காட்சியிலும் யாஷின் அர்ப்பணிப்பை தன்னால் தெளிவாக உணர முடிந்தது” என்று கூறியுள்ளார்.



