ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதல்களை அதிகரிக்க உக்ரைன் திட்டம் : ஜெலென்ஸ்கி உறுதி.!

ரஷியாவின் ராணுவக் கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது உக்ரைன் தனது நீண்டதூர ட்ரோன் தாக்குதல்களின் அளவை உயர்த்துவதே இலக்கு என்று உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் புச்சா மாவட்டத்தில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் 37 போ் உயிரிழந்தனா். நடப்பாண்டு நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக கருத்தப்படுகிறது.

இத்தாக்குதலில் தீ விபத்து ஏற்பட்டு, சுமாா் 50 குடியிருப்புகள் சேதமடைந்தன. முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான காப்பகம் ஒன்றும் சேதமடைந்துள்ளதால், அப்பகுதியில் இருந்து மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர்.

இது தொடர்பாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஜெலென்ஸ்கி பேசியபோது, புச்சா மாவட்டத்தின் மைலா கிராமத்தில் உள்ள ஒரு கிடங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகே வெடிபொருள்களை சேமித்து வைப்பது உக்ரைனில் சட்டப்படி குற்றமாகும் என்பதால், இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதன் காரணமாக, அரசு ஆயுத உற்பத்தி நிறுவனங்களைச் சோ்ந்த 2 அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தெரிவத்தார். ரஷியாவின் ராணுவக் கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது உக்ரைன் தனது நீண்டதூர ட்ரோன் தாக்குதல்களின் அளவை உயர்த்துவதே இலக்கு என்று கூறினார்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *