
இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 357 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறுகிறது. இதில், முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 290 ரன்கள் சேர்த்தது.
இதன் பின்னர், களமிறங்கிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது.
இதில் அதிகபட்சமாக டான் லாரண்ஸ் 50 ரன்களையும், எமிலியோ 31 ரன்களையும் எடுத்தனர். பந்துவீச்சு தரப்பில் பாகிஸ்தான் அணியின் மோகமத் அப்பாஸ் 3 விக்கெட்களையும், குராம் ஷாசாத், முகமது அலி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இந்நிலையில், மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 357 ரன்களில் முன்னிலையில் உள்ளது.


