Advertisements

குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள ஜெகதீப் தன்கர் நல்ல உடல்நலம் பெற்று வாழ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் விலகியுள்ளார். அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு அனுப்பியுள்ள மடலில் தான் பதவி விலகுவது உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளார்.
உடல்நலத்தைக் காக்கும் பொருட்டு, மருத்துவர்களின் ஆலோசனைப்படி தான் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் பதவி விலகியதற்கு என்ன காரணங்கள் இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், குடியரசுத் துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு படிநிலைகளில் நாட்டுக்குத் தொண்டாற்ற அவர் பல வாய்ப்புகளைப் பெற்றிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Advertisements



