தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ்  , உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்..! 

1970களிலும் 80களிலும் தமிழ்த் திரையுலகில் பிரபலமாக விளங்கிய நடிகர் ராஜேஷ் காலமானார். மாறுபட்ட, அழுத்தமான பாத்திரங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தவர் இவர். தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகரான ராஜேஷ் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75. உடல்நலக் குறைவின் காரணமாக இன்று காலை 8.15 மணியளவில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி பிறந்தவர் ராஜேஷ். திண்டுக்கல், வடமதுரை, மேலநத்தம் ஆனைக்காடு, தேனி மாவட்டம் சின்னமனூர் ஆகிய இடங்களில் படித்தவர். காரைக்குடி அழகப்பா கல்லூரி, சென்னை பச்சையப்பாஸ் கல்லூரியிலும் படித்த ராஜேஷ், பின்னர் ஆசிரியர் பயிற்சி முடித்தார். ஆசிரியர் பயிற்சி முடித்த ராஜேஷ், திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு சென்னையில் உள்ள பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

எழுத்தாளரான இவர் ஒன்பது புத்தகங்களையும் எழுதியுள்ளார். கடைசியாக மெர்ரி கிறிஸ்துமஸ் என்கிற தமிழ்ப் படத்தில் நடித்திருந்தார்.
திரைப்பட நடிப்பு, பின்னணிக் குரல் மட்டுமல்லாமல் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். அகவை முதிர்வு, உடல்நலக் குறைவு காரணமாக அவர் இன்று காலமானார். நடிகர் ராஜேசின் உடல் சென்னை ராமபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராஜேசின் திடீர் மறைவு திரைப்படத் துறையினர், ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *