விஜய் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என்று கடுமையாக விமர்சித்த அதிமுக..!

Advertisements

ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் தான் மிகப்பெரிய ஊழல்வாதி என்று அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

மாமல்லபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விஜய்  பேசியபோது, தீய சக்தி தி.மு.க., ஊழல் சக்தி அ.தி.மு.க. இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது” என்று அதிமுகவை முதல்முறையாக கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், விஜய் விமர்சனம் செய்ததற்கு அதிமுக தொழில்நுட்பப் பிரிவு பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக தொழில்நுட்பப் பிரிவின் சமூக வலைத்தளப்பதிவில்,சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் மிகப்பெரிய ஊழல்வாதி என்று தெரிவித்துள்ளது.
மத்திய அரசிற்கு அடிமை’ என்பது அண்ணாதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று என்றும் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்ற பேரியக்கம் என்பதுதான் வரலாறு என்று கூறியிள்ளது. கருரில் 41 பேரின் மரணத்திற்கு நீங்களும் ஒரு காரணம் என்றும் வழக்கு வரும் என்ற பயத்தில் 72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கியிருந்ததாகப் பதிவில் தெரிவித்துள்ளது.
ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் தான் மிகப்பெரிய ஊழல்வாதி என்று அதிமுக தொழில்நுட்பப் பிரிவு கடுமையாக விமர்சித்துள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *