Madurai: முருக பக்த மாநாட்டில் இன்று கந்த சஷ்டி பாடல் பாடி கின்னஸ் சாதனை படைக்க உள்ளதாக தகவல்!

மதுரையில் இன்று பிரமாண்ட முருகன் பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளநிலையில், இதில்  கந்த சஷ்டி பாடல் பாடி கின்னஸ் சாதனை படைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரையில் இன்று குன்றம் காக்க… கோவிலை காக்க…’ எனும் தலைப்பிலான முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு பகல், 3:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கிறது. மாநாட்டின் முக்கிய நிகழ்வாக மாலை, 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படுகிறது. இதற்காக வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள, 8 லட்சம் சதுரடி பரப்பு மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு ஒரு லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. மாநாட்டின் முக்கிய  5 லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பக்தர்களை மதியம், 3:00 மணிக்குள் மாநாட்டு திடலுக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். மாலை, 4:00 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடக்க உள்ளது. மாலை, 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படும். இதற்காக மாநாட்டு வளாகம் முழுதும் 18 எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், பாஸ் பெற வேண்டும் என போலீசார் அறிவித்தற்கு,  உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் வெளியூர்களில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்கேற்ப வாகனங்களை பார்க்கிங் செய்யவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *